அதிமுக வழக்கு: ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை!


அதிமுக வழக்கு: ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை!
x
தினத்தந்தி 3 April 2023 7:58 AM IST (Updated: 3 April 2023 8:33 AM IST)
t-max-icont-min-icon

அதிமுக வழக்கில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் சென்னை ஐகோர்ட்டில் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்க வேண்டுமென ஓபிஎஸ் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் ஓபிஎஸ் தரப்பு இருநீதிபதிகள் அமர்வு முன்பு முறையிட்டுள்ளது.

நேரடியாக இறுதி விசாரணைக்கு தயார் என இருதரப்பும் பதில் அளித்த நிலையில் இன்று விசாரிக்கப்படுகிறது. இந்த விசாரணை, இறுதி விசாரணையா? அல்லது இடைக்கால நிவாரணமா? என்று அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்கின்றனர்.


Next Story