அதிமுக பொதுக்குழு: தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் ஓபிஎஸ் மனு - நாளை விசாரணை


அதிமுக பொதுக்குழு: தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் ஓபிஎஸ் மனு - நாளை விசாரணை
x
தினத்தந்தி 5 July 2022 7:56 PM IST (Updated: 5 July 2022 10:35 PM IST)
t-max-icont-min-icon

ஜூலை 11ம் தேதி நடக்க உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை,

அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி சென்னை வானரகத்தில் நடைபெறவுள்ளது. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜூலை 11ம் தேதி நடக்க உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் புதிய மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், கட்சி விதிகளின்படி பொதுக்குழு, செயற்குழு உள்ளிட்ட எந்த கூட்டங்களை கூட்டுவதாக இருந்தாலும் அதற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் அவசியம். 11ம் தேதி அடுத்த பொதுக்குழு என அவைத்தலைவர் அறிவித்தது கட்சி விதிகளுக்கு முரணானது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் ஜூலை 11ல் கூட்டப்படும் பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.


Next Story