அதிமுக பொன்விழா ஆண்டு நிறைவு: எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் ஓ.பன்னீர் செல்வம் மரியாதை
சென்னை தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் அதிமுக கொடியை ஒ.பன்னீர் செல்வம் ஏற்றினார்.
சென்னை,
ஒற்றை தலைமை விவகாரத்தில், அதிமுக இரண்டாக பிளவுபட்டுக் கிடந்தாலும், 51-வது ஆண்டில் இன்று நுழைகிறது. இந்த தொடக்க விழாவையொட்டி, அதிமுக தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமைக் கழகம் கோலாகலம் பூண்டுள்ளது. 51-ம் ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடும் வகையில் தலைமைக்கழகத்துக்கு இன்று காலை வருகை தந்தார் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
இதேபோன்று, சென்னை தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்திற்கு வருகை தந்த ஒ.பன்னீர் செல்வம், எம்.ஜி.ஆர் சிலைக்கு மரியாதை செலுத்தி அதிமுக கட்சி கொடியை ஏற்றி வைத்தார். இதில் அவரது ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story