அதிமுக கேப்டன் இல்லாத கப்பல்போல தள்ளாடுகிறது - அமைச்சர் மனோ தங்கராஜ்
அதிமுக கேப்டன் இல்லாத கப்பல்போல தள்ளாடுகிறது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.
சென்னை,
அதிமுக தற்போது கேப்டன் இல்லாத கப்பல்போல தள்ளாடுவதாகவும் பாஜகவுக்கு செல்பவர்கள் மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவதற்கு சமம் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதாவது:- "கேப்டன் இல்லாத படகு போல அதிமுக சென்று கொண்டிருக்கிறது. அவர்களிடம் கொள்கையும் இல்லை, கோட்பாடும் இல்லை, தலைமையும் இல்லை என்கிற ஒரு நிலையில் போய்க் கொண்டிருக்கிறது. அது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.
பாஜகவைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், தமிழகத்தில் அவர்களுக்கு இடமில்லை. காரணம், இது திராவிட அரசியலை முன்னெடுக்கக் கூடிய மாநிலம். மேலும் பாஜகவை நம்பிச் செல்கிறவர்கள் மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவதற்குச் சமம். யார் பாஜகவை நம்பி சென்றாலும் அது அவர்களுக்கு ஆபத்தாகவே முடியும்" என்று கூறினார்.
Related Tags :
Next Story