அதிமுக அலுவலக தாக்குதல் சம்பவம்: ஈ.பி.எஸ் ஆதரவாளர்கள் 14 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்


அதிமுக அலுவலக தாக்குதல் சம்பவம்: ஈ.பி.எஸ் ஆதரவாளர்கள் 14 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்
x

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பயங்கரமாக மோதிக்கொண்டனர்.

சென்னை,

அ.தி.மு.க. பொதுக்குழு நேற்று வானகரத்தில் நடைபெற்ற நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு..க தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் பெரிய கலவரமாக மாறியது. இதையடுத்து, போலீசார் கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்த நிலையில், கலவரத்தில் ஈடுபட்டதாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 200 பேர் மீதும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 200 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குப்பதிவின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 14 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில், அதிமுக அலுவலக தாக்குதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் 14 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க காவல்துறை உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து 14 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Next Story