கவர்னர் ஆர்.என்.ரவி உடன் அதிமுக மூத்த நிர்வாகிகள் சந்திப்பு


கவர்னர் ஆர்.என்.ரவி உடன் அதிமுக மூத்த நிர்வாகிகள் சந்திப்பு
x

சென்னை கிண்டி ராஜ்பவனில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியை அதிமுக மூத்த நிர்வாகிகள் சந்தித்தனர்.

சென்னை,

சென்னை கிண்டி ராஜ்பவனில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியை அதிமுக மூத்த நிர்வாகிகள் சந்தித்தனர். கவர்னர் ஆர்.என்.ரவியை முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், விஜயபாஸ்கர், பெஞ்சமின் மற்றும் அதிமுக நிர்வாகிகள் சந்தித்தனர்.

கவர்னரை சந்தித்து சட்டம், ஒழுங்கு மற்றும் செந்தில் பாலாஜி விவகாரங்கள் தொடர்பாக மனு அளித்தனர். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து நீக்குமாறு மனு அளித்துள்ளனர்.

மேலும் முறைகேடாக ரூ.30 ஆயிரம் கோடி சேர்த்ததாக வெளியான ஆடியோ விவகாரம் குறித்தும் விசாரணைக்கு உத்தரவிடுமாறு அதிமுக மூத்த நிர்வாகிகள் கோரினர்.


Next Story