அதிமுக ஒற்றை தலைமை விவகாரம்: எடப்பாடி பழனிசாமிக்கு மேலும் ஒரு பொதுக்குழு உறுப்பினர் ஆதரவு


அதிமுக ஒற்றை தலைமை விவகாரம்: எடப்பாடி பழனிசாமிக்கு மேலும் ஒரு பொதுக்குழு உறுப்பினர் ஆதரவு
x

கோப்புப்படம்

அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு மேலும் ஒரு பொதுக்குழு உறுப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

சென்னை,

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. எடப்பாடி பழனிசாமிக்கு இதுவரை 2440க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ஓ.பன்னீர்செல்வம் தரப்போ ஒற்றை தலைமை என்ற பேச்சுக்கே இடம் இல்லையென கூறிவருகிறது. மேலும் அதிமுகவில் பொதுச்செயலாளரை அடிமட்ட தொண்டர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும், தலைமை கழக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்க முடியாது என கூறிவருகின்றனர்.

இந்நிலையில் அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு மேலும் ஒரு பொதுக்குழு உறுப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. போடிநாயக்கனூர், பழனிசெட்டிபட்டி தீபன் சக்கரவர்த்தி என்பவர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை 2,442ஆக உயர்ந்துள்ளது.


Next Story