அரசு ஆஸ்பத்திரிக்கு மருந்து பொருட்கள் உதவி
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பாவூர்சத்திரம் அரசு ஆஸ்பத்திரிக்கு மருந்து பொருட்கள் வழங்கப்பட்டது.
பாவூர்சத்திரம்:
கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில், தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிறந்த தினத்தையொட்டி பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.30 ஆயிரம் மதிப்பிலான மருத்துவ பொருட்கள், மற்றும் உள் நோயாளிகள் பிரிவில் தங்கி சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு பழம், பிரட், குளுக்கோஸ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஒன்றிய செயலாளர் சீனித்துரை தலைமை தாங்கினார். மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் கலந்துகொண்டு, வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமாரிடம் மருத்துவ பொருட்களை வழங்கினார். தொடர்ந்து நோயாளிகளுக்கு பழம், பிரட், குளுக்கோஸ் ஆகியவற்றை வழங்கினார்.
நிகழ்ச்சியில் கீழப்பாவூர் யூனியன் தலைவி காவேரி, பொதுக்குழு உறுப்பினர் ஏ.பி.அருள், ஒன்றிய கவுன்சிலர்கள் தர்மராஜ், முருகேசன், அட்மா சேர்மன் காந்திராமன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.