தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரண உதவி


தீ விபத்தில் பாதிக்கப்பட்ட  குடும்பத்திற்கு நிவாரண உதவி
x

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.

தஞ்சாவூர்

பாபநாசம் தாலுகா கார்த்திகை தோட்டம் கிராமத்தில் வசித்து வருபவர் லட்சுமணன். இவரது கூரை வீட்டில் திடீரென்று ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்தது. இதை அறிந்த பாபநாசம் தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் இளங்கோவன் தலைமையில் அங்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். தீ விபத்தில் வீட்டில் இருந்த நகை, பணம் மற்றும் தளவாட பொருட்கள் எரிந்து நாசமாயின. இதன் சேதம் மதிப்பு ரூ.1 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பாபநாசம் தாசில்தார் பூங்கொடி ரூ.5 ஆயிரம், வேட்டி, சேலை, அரிசி, மண்எண்ணெய் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போது துணை தாசில்தார் பிரியா, வருவாய் ஆய்வாளர் ரெஜிலா, கிராம நிர்வாக அலுவலர் சாந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story