எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம்
காட்டுப்புத்தூர் ஊராட்சியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
கணியம்பாடி ஒன்றியம், காட்டுப்புத்தூர் ஊராட்சியில் கிராம வரைபடம் மூலம் எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா கோபி தலைமை தாங்கினார். சோழவரம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் காஞ்சனா, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் திலிப்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் விஸ்வநாதன் வரவேற்றார்.
இதில் கிராமத்தின் முழு வரைபடம் வரைந்து, அதன் மூலம் எய்ட்ஸ் தடுப்பு முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் எய்ட்ஸ் தொற்று இல்லாத கிராமம் உருவாக்க வேண்டும் என அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இதில் தொடர்பு பணியாளர் ஜெயகீதா, பூங்ெகாடி, சிவசங்கரி, சங்கர், ஜமுனா, உஷாராணி, ஏஞ்சல், யசோதா, மஞ்சுளா, பிரியா உள்ளிட்டோர் பள்ளி மாணவர்களுடன் இணைந்து விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி ஊ்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே தொடங்கிய ஊர்வலம் பென்னாத்தூர் சாலை, சோழவரம் சாலை, ஆவாரம்பாளையம் சாலை என முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் முடிவடைந்தது.