உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலம்


உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 2 Dec 2022 12:30 AM IST (Updated: 2 Dec 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

திருவாரூர்

திருவாரூரில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

எய்ட்ஸ் தினம்

திருவாரூர் ரெயில் நிலையத்தில் உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி கையெழுத்து இயக்கம் மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கி பதாகையில் தனது கையெழுத்து போட்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து ஆட்டோவில் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த ஸ்டிக்கர்களை ஒட்டினார்.

எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து சிறப்பாக செயல்பட்ட டாக்டர்கள், அலுவலர்களுக்கு நற்சான்றிதழை வழங்கினார். பின்னர் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து, கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நிதி உதவி

திருவாரூர் மாவட்டத்தில் எய்ட்ஸ் நோய் தொடர்பான இறப்புகள் இல்லாத நிலையை உருவாக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து, கல்வி உதவித்தொகை, மருத்துவ சிகிச்சைகளுக்காக நிதி உதவியும் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற சென்று வருவதற்காக கட்டணமில்லா பஸ் பயண அட்டையும் வழங்கப்படுகிறது.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இதில் உதவி கலெக்டர் சங்கீதா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஹேமசந்த் காந்தி, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலர் புகழ், தாசில்தார் நக்கீரன், மருத்துவ அலுவலர் அண்ணாமலை வடிவு, மருத்துவக்கல்லூரி மருத்துவ அலுவலர் சுருதி, எய்ட்ஸ் தடுப்பு மாவட்ட மேற்பார்வையாளர் ராமஜெயம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நடராசன், மாவட்ட ரத்த பரிமாற்று அலுவலர் கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story