எய்ட்ஸ் தின மனிதசங்கிலி விழிப்புணர்வு ஊர்வலம்


தினத்தந்தி 1 Dec 2022 7:30 PM GMT (Updated: 1 Dec 2022 7:31 PM GMT)

உலக எய்ட்ஸ் தின மனித சங்கிலி விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தொடஙகி வைத்தார்..

கிருஷ்ணகிரி

உலக எய்ட்ஸ் தின மனித சங்கிலி விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தொடஙகி வைத்தார்..

உலக எய்ட்ஸ் தினம்

உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் எய்ட்ஸ் தடுப்பு குறிதத உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை தாங்கி, உறுதிமொழியை படிக்க, அனைத்து துறை அலுவலர்களும் திரும்ப படித்து ஏற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து தீபச்சுடரை கலெக்டர் ஏற்றி வைத்து கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். பின்னர் 30 பேருக்கு மாதாந்திர உதவி தொகை பெறுவதற்கான ஆணைகள் மற்றும் 5 திருநங்கைகளுக்கு நல வாரிய அடையாள அட்டைகளை கலெக்டர் வழங்கினார். பின்னர் சமபந்தி விருந்து நடந்தது.

நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி பேசியதாவது:-

ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்

பொதுமக்களிடையே எச்.ஐ.வி, எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் நாள் உலக எய்ட்ஸ் நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த வருடமும் உலக எய்ட்ஸ் தினம் இன்று சமப்படுத்துதல் என்ற கருப்பொருளுடன் கடைபிடிக்கப்படுகிறது. இந்த கருப்பொருளைச் சிறப்பாக செயல்படுத்திட குறிப்பாக எச்.ஐ.வி. தொற்றினால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து, சமப்படுத்தும் பாங்கினையும், எச்.ஐ.வி, எய்ட்ஸ் பரவலைக் குறைப்பதையும் உறுதி செய்திட அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றிட வேண்டும்.

கிருஷ்ணகிரி மாவட்டம் எச்.ஐ.வி, எய்ட்ஸ் தடுப்பு பணியில் முக்கிய பங்கு வகிக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எய்ட்ஸ் தடுப்பு பணியில் 19 நம்பிக்கை மையங்கள், 19 சுக வாழ்வு மையங்கள், 2 கூட்டு மருந்து சிகிச்சை மையங்கள், 10 இணைப்பு கூட்டு மருந்து சிகிச்சை மையம், 2 ரத்த வங்கிகள், 3 இலக்கு மக்களுக்கான திட்டங்கள், பாதிக்கப்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கான அறக்கட்டளை மையம், 24 செஞ்சுருள் சங்கம், ஒரு மாவட்ட அளவிலான பாதிக்கப்பட்டவர்களுக்கான கூட்டமைப்பு, ஒரு விகான் திட்டம், ஒரு இளைப்பாறுதல் மையம் ஆகிய மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

நோய் தாக்கத்தை தடுக்கலாம்

எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்நாளை நீட்டிக்க கூட்டு மருந்து சிகிச்சை மூலம் சிறப்பான முறையில் மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகின்றது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

மருத்துவர்களும் நோயாளிகளும் இணைந்து செயல்பட்டால் எச்.ஐ.வி நோய் தாக்கத்தினை தடுக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மனித சங்கிலி ஊர்வலம்

முன்னதாக கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில், உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியைச் சேர்ந்த 300 -amp;க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட எச்.ஐ.வி.எய்ட்ஸ் விழிப்புணர்வு மனித சங்கிலி ஊர்வலம் கலெக்டர் தலைமையில் நடந்தது.

இதில் நலப்பணிகள் இணை இயக்குனர் பரமசிவன், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருள், உதவி ஆணையர் (ஆயம்) குமரேசன், தாட்கோ பொது மேலாளர் யுவராஜ், கூட்டு மருந்து சிகிச்சை மைய மருத்துவர்கள் ஜெகன், கலையரசன், திருலோகன், கிருஷ்ணகிரி தாசில்தார் சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story