ஆருத்ரா தரிசனத்திற்காக விக்கிரமங்கலம்-ஸ்ரீபுரந்தானுக்கு ஐம்பொன் சிலைகள் வருகை


ஆருத்ரா தரிசனத்திற்காக விக்கிரமங்கலம்-ஸ்ரீபுரந்தானுக்கு ஐம்பொன் சிலைகள் வருகை
x

ஆருத்ரா தரிசனத்திற்காக விக்கிரமங்கலம்-ஸ்ரீபுரந்தானுக்கு ஐம்பொன் சிலைகள் கொண்டு வரப்பட்டது.

அரியலூர்

ஆருத்ரா தரிசனம்

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலத்தில் உள்ள சோழீஸ்வரர் கோவிலுக்கு ஐம்பொன்னாலான நடராஜர், சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர் ஆகிய சாமி சிலைகள் ஜெயங்கொண்டம் அருகே குருவாலப்பர் கோவில் இருந்து நேற்று மாலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டன.

ஆருத்ரா தரிசனத்தையொட்டி விக்கிரமங்கலம் சோழீஸ்வரர் கோவிலில் வைக்கப்பட்டு இன்று (வெள்ளிக்கிழமை) திருவீதியுலா மற்றும் தரிசனம் காட்சி நடைபெற உள்ளது. சாமி தரிசனம் முடிந்த பின்பு மீண்டும் குருவாலப்பர் கோவிலில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்திற்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது.

பிரகதீஸ்வரர் கோவில்

அதேபோல் விக்கிரமங்கலம் அருகே உள்ள பரந்தான் கிராமத்தில் பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள நடராஜர், சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர் ஆகிய 3 ஐம்பொன் சிலைகளும் நாளை நடைபெற உள்ள ஆருத்ரா தரிசனத்திற்காக ஸ்ரீ புரந்தான் கிராமத்திற்கு குருவாலப்பர் கோவில் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது. இங்கும் திருவீதி உலா மற்றும் தரிசனம் முடிந்த பின்பு நாளை மறுதினம் மீண்டும் குருவாலப்பர் கோவிலுக்கு எடுத்து செல்லப்படும்.

ஸ்ரீபுரந்தானில் வைக்கப்பட்டுள்ள சிவகாமி அம்மன் சிலை 3 அடி உயரமும், மாணிக்கவாசகர் சிலை 2 உயரமும் உள்ளன. 5 அடி உயரமுள்ள ஐம்பொன்னாலான நடராஜர் சிலை கடந்த 2008-ம் ஆண்டு கோவிலில் இருந்து திருட்டு போனது. கடந்த 2018-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்டு இந்தியா கொண்டுவரப்பட்டு பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story