முப்பெரும் தேவியர் கோவிலில் ஐப்பசி பூஜை திருவிழா
புளியங்குடி முப்பெரும் தேவியர் கோவிலில் ஐப்பசி பூஜை திருவிழா நடைபெற்றது.
தென்காசி
வாசுதேவநல்லூர்:
புளியங்குடி அரசு மருத்துவமனை அருகே அமைந்துள்ள முப்பெரும் தேவியர் பவானி அம்மன் கோவிலில் பெரியபாளையத்து பவானி அம்மன், நாக கன்னியம்மன், நாகம்மன் கோவிலில் ஐப்பசி மகா பெரும் பூஜை திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அதிகாலை 4 மணியளவில் நடை திறக்கப்பட்டு முப்பெரும் தேவியருக்கு 21 வகையான சிறப்பு அபிஷேகங்களும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றது. குருநாதர் சக்தியம்மா சேலை அணிந்து முழு பெண் உருவத்தில் ஒரு கையில் அக்னி சட்டியுடன் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை பக்தர்களுக்கு சிறப்பு அருள் வாக்கு வழங்கினார்.
மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். பூஜை ஏற்பாடுகளை கோவில் குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story