சங்கரநாராயணசாமி கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணம்


சங்கரநாராயணசாமி கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணம்
x
தினத்தந்தி 23 Oct 2022 12:15 AM IST (Updated: 23 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தென்காசி

சங்கரன்கோவில்:

தென் தமிழகத்தின் மிகவும் புகழ் பெற்ற சிவத்தலங்களுள் சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவிலும் ஒன்று. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் திருக்கல்யாண நிகழ்ச்சி தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் அம்பாள் காலை, மாலை இருவேளைகளிலும் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. முன்னதாக நேற்று காலை கோவிலில் இருந்து அம்பாள் கீழ ரதவீதியில் உள்ள மண்டபத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலையில் கோவிலில் இருந்து காட்சி கொடுக்கும் பந்தலுக்கு சுவாமி வந்தடைந்தார். இதனை தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story