குற்றாலநாத சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழா


குற்றாலநாத சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழா
x
தினத்தந்தி 8 Oct 2023 12:30 AM IST (Updated: 8 Oct 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

குற்றாலநாத சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழா நாளை தொடங்குகிறது.

தென்காசி

குற்றாலத்தில் உள்ள குற்றாலநாத சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழா நாளை (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு நாளை காலை 5.20 மணிக்கு மேல் 6.20 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. விழா நடைபெறும் 10 நாட்களும் காலை, மாலை சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெறுகிறது.

வருகிற 12-ந் தேதி பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு, 13-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. இதில் நான்கு தேர்கள் வடம் பிடித்து இழுக்கப்படுகின்றன. 15-ந் தேதி காலை 9.30 மணி மற்றும் இரவு 7 மணிக்கு நடராஜமூர்த்திக்கு தாண்டவ தீபாராதனை நடக்கிறது.

16-ந் தேதி காலை 10.30 மணிக்கு சித்திரை சபையில் நடராஜமூர்த்திக்கு அபிஷேகம், பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடக்கிறது. 18-ந்் தேதி விசு தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் கவிதா, கோவில் நிர்வாக அதிகாரி கண்ணதாசன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.


Next Story