போக்குவரத்து கழக பணிமனைகளில் குளிரூட்டப்பட்ட ஓய்வறை


போக்குவரத்து கழக பணிமனைகளில் குளிரூட்டப்பட்ட ஓய்வறை
x

திருவண்ணாமலையில் போக்குவரத்து கழக பணிமனைகளில் குளிரூட்டப்பட்ட ஓய்வறையை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை

தமிழ்நாடு அரசு போக்குவரத்துகழகம் திருவண்ணாமலை மண்டலத்தில் திருவண்ணாமலை தேனிமலை பணிமனை வளாகத்தில் புதிய உணவு அருந்தும் கூடம் மற்றும் திருவண்ணாமலையில் உள்ள பணிமனை 1, 2, 3 பணியாளர்களின் குளிரூட்டப்பட்ட ஓய்வறை திறப்பு விழா இன்று தேனிமனை பணிமனையில் நடைபெற்றது.

கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி முன்னிலை வகித்தார்.

விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு குளிரூட்டப்பட்ட ஓய்வறை மற்றும் புதிய உணவு அருந்தும் கூடம் ஆகியவற்றை திறந்து வைத்து பார்வையிட்டார்.

புதிதாக கட்டப்பட்ட உணவு அருந்தும் கூடம் மதிப்பீடு ரூ.18 லட்சத்து 60 ஆயிரம் ஆகும். மேலும் 3 பணிமனைகளுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் ஓட்டுனர், நடத்துனர்களுக்கு குளிரூட்டப்பட்ட ஓய்வறை அமைக்கப்பட்டு உள்ளது.

விழாவில் சி.என்.அண்ணாதுரை எம்.பி., மாநில தடகள சங்கத் துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், ஒ.ஜோதி, செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் எம்.எஸ்.தரணிவேந்தன்,

தமிழ்நாடு அரசு உடல் உழைப்பு தொழிலாளர் மற்றும் சமூக பாதுகாப்பு வாரிய உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் ராஜ்மோகன், தி.மு.க. மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், துணை செயலாளர் பிரியா விஜயரங்கன், நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், அருணை கன்ஸ்ட்ரக்ஷன் துரை வெங்கட் உள்பட அரசு அலுவலர்கள், தொ.மு.ச அணியினர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Next Story