32 வாகனங்களில் ஏர்ஹாரன் பறிமுதல்


32 வாகனங்களில் ஏர்ஹாரன் பறிமுதல்
x
தினத்தந்தி 24 Jan 2023 12:15 AM IST (Updated: 24 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

32 வாகனங்களில் அதிக ஒலியை எழுப்பிய ஏர்ஹாரன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோயம்புத்தூர்


கோவை, ஜன.24-

கோவை மாநகர பகுதியில் சில வாகனங்களில் அதிக ஒலி எழுப் பும் ஏர்-ஹாரன் பொருத்தப்பட்டு உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

இது தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க இணை போக்குவரத்து அதி காரி சிவகுமரன், போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.

இதையடுத்து கோவை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சத்யகுமார், பாலமுருகன், சிவகுருநாதன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் விஜயகுமார், விஸ்வநாதன், செல்வதீபா, வேலுமணி, தனசேகர் மற்றும் அதிகாரிகள் தீவிர வாகன தணிக் கையில் ஈடுபட்டனர்.

அப்போது பஸ்கள் உள்பட 32 வாகனங் களில் அதிக ஒலியை எழுப்பக்கூடிய ஏர்ஹாரன் பொருத்தப்பட்டு இருப்பது தெரியவந்தது.

உடனே அந்த வாகனங்களில் இருந்த ஏர்ஹாரன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் அந்த வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, வாகனங்களில் அதிக ஒலியை எழுப்பக்கூடிய ஏர்-ஹாரன் வைக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதையும் மீறி சில வாகனங்களில் இந்த ஹாரனை பொறுத்தி பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த ஆய்வு தொடர்ந்து நடத்தப்படும். ஆய்வின்போது வாகனங்களில் ஏர்-ஹாரன் இருப்பது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.


Next Story