ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் 70 பேர் கைது


ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் 70 பேர் கைது
x
தினத்தந்தி 24 Jan 2023 6:45 PM GMT (Updated: 24 Jan 2023 6:45 PM GMT)

கள்ளக்குறிச்சி, சங்கராபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் 70 பேரை போலீசார் கைது செய்தனர்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் சார்பில் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதற்கு நிர்வாகி ஆண்டாள் தலைமை தாங்கினார். கல்யாணசுந்தரம் அருண், அப்பாவு, அழகிரி, கலிய பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு மற்றும் தனியார் துறையில் தொடர்ந்து 240 நாட்கள் பணிபுரிந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும், மருத்துவத்துறை, டாஸ்மாக், கூட்டுறவு மற்றும் பொதுத்துறைகளில் எந்த தொழிலில் செய்தாலும் மாத ஊதியம் ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும், நல வாரிய பதிவுகளை எளிமைப்படுத்தி தாமதம் இல்லாமல் நிதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

இந்த மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 50 பெண்கள் உள்பட 60 பேரை கள்ளக்குறிச்சி போலீசார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து பின்னர் மாலையில் விடுவித்தனர்.

சங்கராபுரம்

இதேபோல் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் சாா்பில் சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் மறியல் போராட்டம் மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜ் தலைமையில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ஜெயபிரகாஷ் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டவர்கள் ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்தும், நலவாரிய பதிவுகளை எளிமைப்படுத்தி நிதி பலன்களை உயர்த்த வேண்டும், 100 நாள் வேலையை 200 நாட்களாக வழங்க வேண்டியும், ஆஷா பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் நிர்வாகிகள் மணி, சரண்ராஜ், திருமூர்த்தி, சண்முகம், பன்னீர்செல்வம், சீனுவாசன், சிங்காரவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மறிலில் ஈடுபட்ட 10 பேரை சங்கராபுரம் போலீசார் கைது செய்து அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.


Next Story