ஏ.ஐ.டி.யு.சி. கட்டுமான தொழிலாளர்கள் சங்க கூட்டம்


ஏ.ஐ.டி.யு.சி. கட்டுமான தொழிலாளர்கள் சங்க கூட்டம்
x
தினத்தந்தி 31 Dec 2022 12:15 AM IST (Updated: 31 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கழுகுமலையில் ஏ.ஐ.டி.யு.சி. கட்டுமான தொழிலாளர்கள் சங்க கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

கழுகுமலை:

தூத்துக்குடி மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. கட்டுமான தொழிலாளர்கள் சங்க நிர்வாக குழு கூட்டம் கழுகுமலையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் மகாராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ராமலிங்கம் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொது செயலாளர் சேது கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் ஓய்வு பெறும் கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்களிடம் விசாரணை என்ற பெயரில் தொல்லை செய்வதை தமிழக அரசு நிறுத்தி கொள்ள வேண்டும். தொழிலாளர் சட்டங்களை மாற்ற முயற்சி செய்யும் மத்திய அரசை கண்டித்தும், அதற்கு தமிழக அரசு துணை போகாமல் இருக்க வலியுறுத்தி வரும் ஜன.24-ந் தேதி தூத்துக்குடியில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் சண்முகராஜ், சுடலைமுத்து, பெரியசாமி, செல்வி, அய்யாதுரை, முருகன், உத்தண்டராமன், புஷ்பவள்ளி, பாண்டி, ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story