ஏ.ஐ.டி.யூ.சி. அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


ஏ.ஐ.டி.யூ.சி. அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x

ஏ.ஐ.டி.யூ.சி. அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி

மணப்பாறை நகராட்சி அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யூ.சி. அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கவுன்சிலர் தங்கமணி தலைமை தாங்கினார். இதில் துப்புரவு மேற்பார்வையாளர் பணியினை பணி மூப்பு அடிப்படையில் உள்ளூர் பணியாளர்களுக்கு வழங்கிட வேண்டும், வெளியூரில் இருந்து பணி நியமனம் செய்யக் கூடாது, பணியாளர்கள் பணிபுரிய உகந்த வகையில் தரமான தளவாட ெபாருட்கள் வழங்கிட வேண்டும், ஒப்பந்த பணியாளர்களுக்கு சட்டப்படி ஆண்டுதோறும் ஊதிய உயர்வு அளித்திடவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாவட்ட உள்ளாட்சி தொழிலாளர்கள், ஏ.ஐ.டி.யூ.சி. சங்க மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story