ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

வேலூரில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர்

வேலூர்

வேலூரில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சிம்புதேவன் தலைமை தாங்கினார். ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் ஆல்வின், உழைக்கும் பெண்கள் மாவட்ட செயலாளர் சரோஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை தலைவர் எஸ்.ஆர்.தேவதாஸ் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ.21 ஆயிரம் என சட்டப்படி அறிவிக்க வேண்டும். மின்கட்டணம், வீட்டுவரி, சொத்துவரி, குடிநீர் வரி உயர்வை கைவிட வேண்டும். கட்டுமானம் உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு நலவாரியம் மூலம் மாதம் ரூ.6 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



Next Story