ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

மின் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்

நாகை புதிய பஸ் நிலையத்தில் ஏ.ஐ.டி.யூ..சி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராமன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் மகேந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சிவகுரு பாண்டியன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சரபோஜி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.கூட்டுறவு, உள்ளாட்சி, மருத்துவத்துறை, டாஸ்மாக் உள்ளிட்ட பொதுத்துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.21 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும். ஒப்பந்த, தினக்கூலி முறைகளில் பணி அமர்த்துவதை கைவிட வேண்டும். மின் கட்டணம், சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் வரி உயர்வுகளை திரும்ப பெற வேண்டும். அரசு போக்குவரத்து, மின்வாரியம், நுகர்வு பொருள், ஆவின் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மையம் ஆக்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.


Next Story