ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 April 2023 12:15 AM IST (Updated: 22 April 2023 12:19 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம்

நாகை புதிய பஸ் நிலையத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சரபோஜி, சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ரவி ஆகியோர் கலந்துகொண்டு பேசியனர். தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 8 மணி நேர வேலை நேரத்தை 12 மணி நேரமாக மாற்றும் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.


Next Story