ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Jun 2023 1:30 AM IST (Updated: 20 Jun 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு ஏ‌.ஐ‌.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நீலகிரி

ஊட்டி

ஊட்டியில் செயல்படும் ஒரு தனியார் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் சார்பில், ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் சையது இப்ராஹிம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தனியார் பள்ளியில் பணிபுரிந்த தொழிலாளர்களை கொரோனா காலத்தில் பள்ளிக்கு வர வேண்டாம் என்று பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது. மற்ற தொழிலாளர்களுக்கு கொரோனா காலத்தில் 30 சதவீத ஊதியம் குறைக்கப்பட்டது. கொரோனா காலத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை குறைக்கக்கூடாது என அரசு உத்தரவு பிறப்பித்திருந்தும், இதை மீறி ஊதியத்தை பிடித்தம் செய்தது கண்டிக்கத்தக்கது. எனவே, சட்டப்படி தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என கோஷங்களை எழுப்பி வலியுறுத்தினர். இதில் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


Next Story