ஏ.ஐ.டி.யு.சி. கிராம ஊராட்சி பணியாளர்கள் சங்க கூட்டம்


ஏ.ஐ.டி.யு.சி. கிராம ஊராட்சி பணியாளர்கள் சங்க கூட்டம்
x
தினத்தந்தி 25 Aug 2023 12:30 AM IST (Updated: 25 Aug 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் ஏ.ஐ.டி.யு.சி. கிராம ஊராட்சி பணியாளர்கள் சங்க கூட்டம் நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. கிராம ஊராட்சி பணியாளர் சங்கம் சார்பில் வருகிற நவம்பர் மாதம் 19-ந்தேதி திண்டுக்கல்லில் மாநாடு நடைபெறுகிறது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் நெல்லை சிந்துபூந்துறை இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் சடையப்பன் தலைமை தாங்கினார். மாநில இணை செயலாளர் பரமசிவன், நெல்லை மாவட்ட தலைவர் மணி, ஒன்றிய தலைவர்கள் மானூர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் லட்சுமணன் ஆலோசனைகள் வழங்கி பேசினார்.

கூட்டத்தில், கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர்தேக்க தொட்டி திறப்பாளர்களுக்கு மாத சிறப்பு காலமுறை ஊதியமாக ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Next Story