அகரம்சீகூர் மாரியம்மன் கோவில் தேரோட்டம்
அகரம்சீகூர் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, அகரம்சீகூர் மாரியம்மன் கோவில் தீ மிதி-தேர் திருவிழா கடந்த 9-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை காத்தவராயன் சுவாமி, ஆரியமாலா அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதையடுத்து உற்சவர் மாரியம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். பின்னர் காலை 10 மணியளவில் தேரோட்டம் தொடங்கியது. தேரினை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் தேரோடும் வீதிகளின் வழியாக சென்று மீண்டும் நிலையம் வந்தடைந்தது. மாலையில் மோடி எடுத்தல் நிகழ்ச்சியும், இரவு அம்மனுக்கு சிறப்பு பூஜையும் நடந்தது. பாதுகாப்பு பணியில் மங்களமேடு போலீசார் ஈடுபட்டிருந்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் தீமிதித்தல் நடைபெறுகிறது. நாளை (சனிக்கிழமை) அம்மனுக்கு மஞ்சள் நீராட்டுதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.