பிறந்த நாள் கொண்டாடிய கோவில் யானை அகிலா


பிறந்த நாள் கொண்டாடிய கோவில் யானை அகிலா
x

கோவில் யானை அகிலா பிறந்த நாள் கொண்டாடியது.

திருச்சி

பஞ்சபூத தலங்களில் நீர்த்தலமாக விளங்குவது திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில். இக்கோவிலில் அகிலா என்ற யானை உள்ளது. இந்த யானை 2002-ம் ஆண்டு அசாம் மாநிலத்தில் பிறந்தது. கடந்த 2011-ம் ஆண்டு ஒரு தனியார் அறக்கட்டளை சார்பில் அந்த யானை திருவானைக்காவல் கோவிலுக்கு வழங்கப்பட்டது. இக்கோவிலில் யானை அகிலா கடந்த 11 வருடங்களாக இறை பணியாற்றி வருகிறது. அகிலா குளிப்பதற்காக கோவில் நந்தவனத்தில் நீச்சல் குளம், நடைபாதை மற்றும் சேற்று மண்ணில் குளிப்பதற்காக 1,200 சதுர அடியில் சேற்று குளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று யானை அகிலாவுக்கு 21-வது பிறந்த நாளை முன்னிட்டு, அதற்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு கஜ பூஜை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து யானை அகிலாவுக்கு பிடித்தமான பழங்கள், காய்கறிகள், பொரி, பொட்டுக்கடலை மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன், அர்ச்சகர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story