அக்கரைப்பூண்டி முத்துமாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்

அக்கரைப்பூண்டி முத்துமாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்
x

அக்கரைப்பூண்டி முத்துமாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்

தஞ்சாவூர்

கபிஸ்தலம் அருகே அக்கரைப்பூண்டி கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவி்லில் பால்குட திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி அக்கரைப்பூண்டி காவேரி ஆற்றங்கரையில் இருந்து 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், சக்தி கரகம், காவடி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர். பின்பு அம்மனுக்கு பால்அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Next Story