அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி மையத்தில் மாணவர் சேர்க்கை


அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி மையத்தில் மாணவர் சேர்க்கை
x

அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி மையத்தில் மாணவர் சேர்க்கை

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் கே.பி.புபேஷ்குப்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருத்துறைப்பூண்டி மேட்டுத்தெருவில் அமைந்துள்ள அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி மையத்தில் அனைத்து இளநிலை, முதுநிலை மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு 2022-2023-ம் கல்வியாண்டு சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. முதுநிலை இயற்பியல், முதுநிலை வேதியியல், முதுநிலை விலங்கியல் மற்றும் முதுநிலை தாவரவியல் படிப்புகள் இந்த கல்வியாண்டு புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. மேலும் 20 வகையான எம்.பி.ஏ. படிப்புகளை தொலைநிலைக்கல்வி மையம் வாயிலாக மேற்கொள்ளலாம். எனவே மாணவர்கள் போட்டோ, 10, 12-ம் வகுப்பு மற்றும் இளநிலை மதிப்பெண் பட்டியல், இளநிலை பட்டம், ஆதார் நகல், சாதி சான்று ஆகிய ஆவணங்களை கொண்டு வந்து சேர்ந்து கொள்ளலாம். இதற்கான பாடநூல்கள், பயிற்சி வகுப்புகள் வழங்கப்படும். மேலும் விவரம் பெற கல்வி மைய அலைபேசி 9943949576 எண்ணை தொடர்பு கொள்ளலாம். இ்வ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story