அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி தேர்வு முடிவுகள்


அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி தேர்வு முடிவுகள்
x

அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக்கல்வி வாயிலாக மே 2023-ல் நடைபெற்ற இளநிலை பிரிவுகள், முதுநிலை பிரிவுகள், முதுநிலை பட்டயபிரிவுகள், இளநிலை பட்டய பிரிவுகள் சான்றிதழ் பிரிவுகளுக்கான தேர்வு முடிவுகள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த முடிவுகளையொட்டி நேரடியாக மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தேர்வு முடிவு வெளியான 7 நாட்களுக்குள் பாடம் ஒன்றுக்கு ரூ.600 இணையதளம் வழியே செலுத்தி விண்ணப்பிக்கலாம். .விடைத்தாள் நகல் பெற விரும்பும் மாணவர்கள் தேர்வு முடிவு வெளியான 7 நாட்களுக்குள் வினாத்தாள் நகல் ஒன்றுக்கு ரூ.500 இணையதளம் வழியாக செலுத்தி விண்ணப்பிக்கலாம். வினாத்தாள் நகல் பெற்ற பின்பு மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் வினாத்தாள் நகல் பெற்ற நாளில் இருந்து 7 தினங்களுக்குள் பாடம் ஒன்று ரூ.500 இணையதளம் வழியாக செலுத்தி விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அழகப்பா பல்கலைக்கழக தேர்வாணையர் கண்ணபிரான் தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story