தமிழக அளவில் தரவரிசை பட்டியலில் அழகப்பா பல்கலைக்கழகம் முதலிடம்


தமிழக அளவில் தரவரிசை பட்டியலில் அழகப்பா பல்கலைக்கழகம் முதலிடம்
x

தமிழக அளவில் தரவரிசை பட்டியலில் அழகப்பா பல்கலைக்கழகம் முதலிடத்தை பெற்று உள்ளது.

சிவகங்கை

காரைக்குடி,

தமிழக அளவில் தரவரிசை பட்டியலில் அழகப்பா பல்கலைக்கழகம் முதலிடத்தை பெற்று உள்ளது.

முதலிடம்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், டைம்ஸ் உயர் கல்வி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஆசிய பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் 2022-ன் படி 122-வது இடத்தைப் பெற்றுள்ளது. 2021-ம் ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் 829 ஆசிய அளவிலான கல்வி நிறுவனங்கள் தர வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த தரவரிசையில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகமானது 122-வது இடத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலிருந்து கலந்துகொண்ட உயர்கல்வி நிறுவனங்களில் அழகப்பா பல்கலைக்கழகம் 6-வது இடத்தையும் தமிழக அளவில் முதலிடத்தையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

டைம்ஸ் உயர்கல்வி நிறுவனம் இத்தரவரிசைக்காக கற்பித்தல், ஆராய்ச்சி, அறிவு பரிமாற்றம், சர்வதேச கண்ணோட்டம் மற்றும் தொழில்துறை வருமானம் ஆகிய 5 குறிப்பிட்ட பகுதிகளின் கீழ் உயர்கல்வி நிறுவனங்களில் செயல்திறனை மதிப்பீடு செய்து தர வரிசைப் படுத்தியுள்ளது. தரவரிசைப் பட்டியலில் கலந்துகொள்வதற்காக அழகப்பா பல்கலைகழக தரவரிசை பிரிவு இயக்குனர் ஜெயகாந்தன் மற்றும் குழுவினர் பல்கலைக்கழகத்தில் 2021-ம் ஆண்டுக்கான தகவல்களை சேகரித்து சரியாக பகுப்பாய்வு செய்து சமர்ப்பித்திருந்தனர்.

பாராட்டு

இந்த உயரிய தரவரிசையில் அழகப்பா பல்கலைக்கழகத்தினை இடம் பெறச் செய்த பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களை துணைவேந்தர் பொறுப்பு குழுத்தலைவரும் தமிழக உயர்கல்வித்துறை முதன்மை செயலாளருமான கார்த்திகேயன், துணை வேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினர்கள் சுவாமிநாதன், பேராசிரியர் கருப்புசாமி ஆட்சிக்குழு உறுப்பினர்கள் சங்கரநாராயணன், குணசேகரன் ராஜா மற்றும் பதிவாளர் ராஜாமோகன் ஆகியோர் பாராட்டினர்.


Related Tags :
Next Story