அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழா


அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழா
x

நாங்குநேரி யூனியன் சிவந்தியாபுரம் கிராமத்தில் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

திருநெல்வேலி

இட்டமொழி:

சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துகோன் பிறந்தநாள் விழா நாங்குநேரி யூனியன் சிவந்தியாபுரம் கிராமத்தில் நடைபெற்றது. இதில் அழகுமுத்துகோன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சங்கனாங்குளம் ஊராட்சி செயலர் நம்பி உட்பட ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

மூலைக்கரைப்பட்டியில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் நெல்லை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து தலைமையில் வீரன் அழகுமுத்துக்கோன் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது. நாங்குநேரி ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, களக்காடு ஒன்றிய செயலாளர் ராஜசேகர், நாங்குநேரி நகர செயலாளர் நாஞ்சில் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story