ஆலம்பூண்டி ஆலகால ஈஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்


ஆலம்பூண்டி  ஆலகால ஈஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
x

ஆலம்பூண்டி ஆலகால ஈஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழுப்புரம்

செஞ்சி,

செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டியில் மங்களாம்பிகை உடனுறை ஆலகால ஈஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த 5-ந்தேதி விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து யாகசாலை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்று வந்தது. விழாவில் நேற்று யாகசாலை பூஜை நடைபெற்றது. பின்னர் யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஆலகால ஈஸ்வரர் கோவில் கோபுரத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மூலவருக்கும் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாலையில் மங்களாம்பிகை உடனுறை ஆலகால ஈஸ்வரருக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியும் இரவில் சாமி வீதி உலாவும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.


Next Story