வங்கியில் அலாரம் ஒலித்ததால் பரபரப்பு


வங்கியில் அலாரம் ஒலித்ததால் பரபரப்பு
x

வங்கியில் அலாரம் ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை

திருமங்கலம்,

திருமங்கலம் மதுரை மெயின் ரோட்டில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளை உள்ளது. நேற்று காலை வழக்கம்போல் பணி முடிந்து ஊழியர்கள் வங்கியை பூட்டிச் சென்று விட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் வங்கியில் அலாரம் திடீரென ஒலிக்க தொடங்கியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் திருமங்கலம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். திருமங்கலம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது அலாரம் தொடர்ந்து அடித்துக்கொண்டிருந்தது. இதுகுறித்து வங்கி மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைய வங்கியின் மேலாளர் மற்றும் ஊழியர்கள் வந்து வங்கியை திறந்து பார்த்தபோது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அலாரம் ஒலித்தபடியே இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து ஊழியர்கள் அலாரத்தை நிறுத்தினர்.

1 More update

Next Story