வால்பாறையில் மதுவிலக்கு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி
வால்பாறையில் மதுவிலக்கு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
கோயம்புத்தூர்
வால்பாறை
வால்பாறையில் கோவை மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் பொள்ளாச்சி கோட்ட கலால்துறை அதிகாரி சசிரேகா மேற்பார்வையில் மதுவிலக்கு மற்றும் சாராய ஒழிப்பு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கலைக்குழுவினர் வால்பாறை காந்தி சிலை பஸ் நிறுத்தம், பழைய பஸ் நிலையம், ஸ்டேன்மோர் சந்திப்பு, வாட்டர் பால்ஸ் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அப்போது சாராயம் குடிப்பதால் தூக்கமின்மை, வாந்தி, வயிற்று புண், காசநோய், இரத்த அழுத்தம், மலட்டுத்தன்மை, கண் பார்வை மங்கிப் போதல், நரம்பு மண்டல பாதிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. இதனால் மது குடிக்க வேண்டாம் என்று கூறினர்.
Related Tags :
Next Story