காரில் கடத்த முயன்ற 3,840 மதுபாட்டில்கள் பறிமுதல்
கர்நாடகாவில் இருந்து திருப்பத்தூருக்கு காரில் கடத்த முயன்ற 3,840 மதுபாட்டில்களை குருபரப்பள்ளி அருகே போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.
குருபரப்பள்ளி
கர்நாடகாவில் இருந்து திருப்பத்தூருக்கு காரில் கடத்த முயன்ற 3,840 மதுபாட்டில்களை குருபரப்பள்ளி அருகே போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.
மது கடத்த முயற்சி
கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி போலீசார் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். வேப்பனப்பள்ளியில் இருந்து குருபரப்பள்ளி நோக்கி வந்த காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 40 அட்டை பெட்டிகளில், கர்நாடக மதுபாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து கார் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் திருப்பத்தூர் மாவட்டம், முத்தம்பட்டி காலனியை சேர்ந்த தங்கமணி (வயது32) என்பதும், கர்நாடகா மாநிலத்தில் மதுபாட்டில்கள் வாங்கி திருப்பத்தூருக்கு கடத்தியது தெரிய வந்தது.
கார் பறிமுதல்
இதையடுத்து போலீசார் தங்கமணியை கைது செய்தனர். மேலும் அட்டை பெட்டிகளில் இருந்த ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான 3,840 கர்நாடக மதுபாட்டில்கள் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.