"மதுபானத்தை டெட்ரா பேக்கில் கொண்டு வந்தால் கலப்படம் தவிர்க்கப்படும்" - அமைச்சர் முத்துசாமி


மதுபானத்தை டெட்ரா பேக்கில் கொண்டு வந்தால் கலப்படம் தவிர்க்கப்படும் - அமைச்சர் முத்துசாமி
x

மதுபானத்தை டெட்ரா பேக்கில் கொண்டு வந்தால் கலப்படம் தவிர்க்கப்படும் என்று அமைச்சர் முத்துசாமி கூறினார்.

ஈரோடு,

போலி மதுபானம் உள்ளிட்ட பிரச்சினைகளைத் தவிர்க்க, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் கண்ணாடி பாட்டில்களுக்கு பதில் காகிதக் குடுவையில் (டெட்ரா பாக்கெட்) மதுபானம் வழங்க அரசு ஆலோசித்து வருகிறது. இந்த நிலையில், மதுபானத்தை டெட்ரா பேக்கில் கொண்டு வந்தால் கலப்படம் தவிர்க்கப்படும் என்று அமைச்சர் முத்துச்சாமி தெரிவித்துள்ளார்.


இது குறித்து வீட்டு வசதித்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி ஈரோட்டில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

"மதுபானங்களை டெட்ரா பேக்கில் கொண்டு வருவது குறித்து பேசி வருகிறோம். மதுபானத்தை டெட்ரா பேக்கில் கொண்டு வந்தால் கலப்படம் தவிர்க்கப்படும் , டெட்ரா பேக்கை கையாளுவது சுலபம், மறுசுழற்சி செய்வதால் விவசாயிகளுக்கு நன்மை உள்ளது. டெட்ரா பேக் குறித்து அதிகாரிகள் குழு வழங்கும் அறிக்கை அடிப்படையில் அமல்படுத்தப்படும். 90 மில்லி காகிதக் குடுவையில் மதுபானம் வழங்க ஆலோசிக்கப்பட்டுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்" என்று கூறினார்.


Next Story