'தமிழகத்தில் மது கொள்கையை மாற்றி அமைக்க வேண்டும்'


தமிழகத்தில் மது கொள்கையை மாற்றி அமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 8 Aug 2023 1:30 AM IST (Updated: 8 Aug 2023 1:31 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவை பின்பற்றி தமிழகத்திலும் மது கொள்கை, மதுவிலக்கு மாற்றி அமைக்கப்பட வேண்டும் என கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் வலியுறுத்தினார்.

திண்டுக்கல்

தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி, பழனியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அரசியல் அமைப்பு சட்டம் கொடுத்திருக்கும் உணவு தேடும் உரிமை தான் கள் இறக்குவதும், பருகுவதும். எனவே கள்ளுக்கு கடையும், தடையும் கூடாது என வலியுறுத்தி வருகிற ஜனவரி 21-ந்தேதி கள் இறக்கி சந்தைப்படுத்தும் அறப்போராட்டம் நடைபெற உள்ளது.

இதேபோல் பனை, தென்னை விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 22-ந்தேதி பொள்ளாச்சியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாமாயில் இறக்குமதியை குறைத்து, உள்ளூர் தேங்காய் எண்ணெய் சார்ந்த பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட உள்ளது.

கேரளாவில் கள் இறக்கி விற்பனை செய்ய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. குறிப்பாக 'கேரள கள்' என்ற பெயரில் விற்கவும், கள்ளுவில் இருந்து வினிகர் தயாரிப்பு, மதிப்புக்கூட்டு பொருட்களும் தயாரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே கேரளாவை பின்பற்றி தமிழகத்திலும் மது கொள்கை, மதுவிலக்கு மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

காவிரியில் தினமும் நீர் பங்கீடு என்ற முறை இருந்தால் தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை பெறுவதில் சிக்கல் இருந்திருக்காது. தமிழகத்தில் ஆனைமலை நல்லாறு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு கூறினார்.


Related Tags :
Next Story