சாராய ஊறல்கள் சிக்கின; வாலிபர் கைது


சாராய ஊறல்கள் சிக்கின; வாலிபர் கைது
x

சாராய ஊறல்கள் சிக்கியதுடன் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த மம்சாபுரம் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் சாராய ஊறல் இருப்பதாக மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் நிர்மலாவிற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நிர்மலா, சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகர் ஆகியோர் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு சாராய ஊறல் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் கடற்கரை (வயது 26) என்பவர் 9½ லிட்டா் சாராய ஊறலை வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, சாராய ஊறலை கைப்பற்றினர்.


Related Tags :
Next Story