பாசி நிறுவன சொத்து ஏலம்


பாசி நிறுவன சொத்து ஏலம்
x
தினத்தந்தி 25 April 2023 12:15 AM IST (Updated: 25 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பாசி நிறுவன சொத்து ஏலம்

கோயம்புத்தூர்

கோவை

திருப்பூரை தலைமையிடமாக கொண்டு பாசி போரக்ஸ் டிரேடிங் என்ற ஆன்லைன் நிறுவனம் செயல்பட்டது. இந்த நிறுவனம் பொதுமக்கள் அளிக்கும் முதலீட்டு பணத்திற்கு 40 சதவீதம் வரை வட்டி தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை நம்பிய ஏராளமான பொதுமக்கள் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.

இவ்வாறு பொதுமக்கள் முதலீடு செய்த தொகை திருப்பி தரப்படவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் 58 ஆயிரம் பேரிடம் ரூ.930 கோடி மோசடி செய்தது தெரியவந்தது.

இந்த நிலையில் அந்த நிறுவனத்திற்கு சொந்தமாக கோவை விளாங்குறிச்சியில் 4,352 சதுரஅடியில் உள்ள வீடு உள்ளது. இந்த வீடு வருகிற 18-ந் தேதி மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலையில் கலெக்டர் அலுவலகத்தில் வைத்து ஏலம் விடப்பட உள்ளது. இந்த தகவலை மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் தெரிவித்து உள்ளார்.



Next Story