சாய்ந்த மின்கம்பங்கள் சீரமைப்பு
திருவெண்காடு அருகே சாய்ந்த மின்கம்பங்கள் சீரமைப்பு ; மின்வாரிய ஊழியர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு
மயிலாடுதுறை
திருவெண்காடு:
திருவெண்காடு ஊராட்சிக்கு உட்பட்ட வடபாதியில் ஏராளமான ஆதிதிராவிட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள தெருவிற்கு செல்லும் சாலையில் உள்ள 2 மின்கம்பங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீசிய பலத்த காற்றால் சாய்ந்து காணப்பட்டது. இதனால் அந்த வழியே செல்லும் மக்கள் அச்சத்துடன் சென்று வந்தனர். இதுகுறித்து திருவெண்காடு மின்வாரிய அலுவலகத்தில் அப்பகுதி பொதுமக்கள் மனு அளித்தனர். இதனை தொடர்ந்து மின்வாரிய உதவி பொறியாளர் ரமேஷ் மேற்பார்வையில், மின் ஊழியர்கள் மேற்கண்ட இடத்தில் சாய்ந்த நிலையில் இருந்த அந்த 2 மின்கம்பங்களையும் சீரமைத்தனர்.
இதையடுத்து பொதுமக்கள் நலன் கருதி கோரிக்கையை ஏற்று உடனடியாக சாய்ந்த மின்கம்பங்களை சரிசெய்த மின்வாரிய ஊழியர்களை அந்த பகுதி பொது மக்கள் பாராட்டினார்.
Related Tags :
Next Story