10 மற்றும் 11-ம் வகுப்பு தேர்வு எழுதிய 24 கைதிகளும் தேர்ச்சி


10 மற்றும் 11-ம் வகுப்பு தேர்வு எழுதிய 24 கைதிகளும் தேர்ச்சி
x
தினத்தந்தி 19 May 2023 6:45 PM GMT (Updated: 19 May 2023 6:46 PM GMT)

கடலூர் மத்திய சிறையில் 10 மற்றும் 11-ம் வகுப்பு தேர்வு எழுதிய 24 கைதிகளும் தேர்ச்சி

கடலூர்

கடலூர் முதுநகர்

கடலூர் அருகே உள்ள கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் அதிகமான விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு தண்டனை கைதிகள் 13 பேர் 10-ம் வகுப்பு, 11 பேர் 11-ம் வகுப்பு பொதுத் தேர்வும் எழுதினார்கள். இதில் தேர்வு எழுதிய 24 கைதிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதையடுத்து தேர்ச்சி பெற்ற கைதிகளை சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தார்.


Next Story