சென்னை ஐகோர்ட்டின் 6 நுழைவு வாசல்களும் இன்று இரவு மூடல்
நுழைவு வாசல்கள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும் நேரத்தில் வக்கீல்கள், பொதுமக்கள் உள்பட யாரும் கோர்ட்டிற்குள் செல்லமுடியாது.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டு, ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாரம்பரிய கட்டிடமாகும். இது இன்று வரை அதன் பழைமை மாறாமல் பராமரிக்கப்பட்டு வருகிறது.
ஆங்கிலேயர்கள் உயர்நீதிமன்றத்தை கட்டியதால் அதற்கு மரியாதை செய்யும் வகையிலும், மேலும் இது பொதுசொத்து அல்ல என்பதை வலியுறுத்தும் வகையிலும் ஆண்டிற்கு ஒருமுறை அதன் நுழைவு வாசல்கள் பூட்டப்படுகின்றன.
பல ஆண்டுகளாக பின்பற்றப்படும் சம்பிரதாயத்தை சென்னை ஐகோர்ட்டின் 6 நுழைவு வாசல்களும் இன்று இரவு 8 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிவரை ஒருநாள் முழுவதும் மூடப்படுகின்றன.
இதற்கான அறிவிப்பை ஐகோர்ட்டு பதிவாளர் பி.ஹரி வெளியிட்டார். நுழைவு வாசல்கள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும் போது வக்கீல்கள், பொதுமக்கள் உள்பட யாரும் நீதிமன்றத்துக்குள் செல்ல அனுமதி இல்லை.
Related Tags :
Next Story