அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி ஆர்ப்பாட்டம்
சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி ஆர்ப்பாட்டம் ராமநாதபுரத்தில் நடைபெற்றது.
ராமநாதபுரம்
பனைக்குளம்.
சமையல் கியாஸ் விலையை கண்டித்தும், காவிரி வைகை குண்டாறு திட்டத்தை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் மத்திய - மாநில அரசை கண்டித்து ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பூவலிங்கம் மாரி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் சுரேஷ் தேவர் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் முத்துராமலிங்கம், டி.வி.சி.சி.மாநில தலைவர் நல்லமுத்து, மாநில இளைஞரணி தலைவர் ஸ்ரீவை.எஸ்.சுரேஷ் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்..இதில் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story