அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
முதுகுளத்தூர் பஸ் நிலையம் அருகில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம்
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் பஸ் நிலையம் அருகில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் மாவட்ட அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாவட்டத் துணை செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பூமிநாதன், ஒன்றிய தலைவர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழாவை மத்திய அரசு தேசிய விடுமுறையாக அறிவிக்க வேண்டும். இந்திய ரூபாய் நாணயங்களில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவம் அச்சிட்டு வெளியிட வேண்டும்.
அவரது இறப்புக்கான முழு ஆவணங்களை வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் இதனைத்தொடர்ந்து சுபாஷ் சந்திர போஸ் 126-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
Related Tags :
Next Story