அகில இந்திய பெண்களுக்கான கூடைப்பந்து போட்டி நிறைவு:கேரளா மின்வாரிய அணி சாம்பியன்


அகில இந்திய பெண்களுக்கான கூடைப்பந்து போட்டி நிறைவு:கேரளா மின்வாரிய அணி சாம்பியன்
x

அகில இந்திய பெண்களுக்கான கூடைப்பந்து போட்டி நிறைவு பெற்றதையடுத்து கேரளா மின்வாரிய அணி சாம்பியன் பட்டத்தை பிடித்தது.

கரூர்

கரூர் மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் அகில இந்திய பெண்கள் கூடைப்பந்து போட்டி கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் கடந்த 8-ந்தேதி தொடங்கி 5 நாட்களாக நடந்தது. நேற்று இரவு இறுதிப்போட்டி நடந்தது. இதில், கேரளா மின்வாரிய அணியும், சவுத் வெஸ்டர்ன் ெரயில்வே ஹூக்ளி அணியும் மோதியது.இதில், கேரளா மின்வாரிய அணி 73-48 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. 2-வது இடத்தை சவுத் வெஸ்டரன் ெரயில்வே அணி பிடித்தது. 3-வது இடத்தை சென்னை சதன் ெரயில்வே அணி, 4-வது இடத்தை சாய் ஸ்போர்ட்ஸ் சென்டர் சத்தீஸ்கர் அணியும் பிடித்தது. இதையடுத்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கரூர் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.


Next Story