மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அவினசி
அரசு நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க வேண்டும். வீடற்றவர்களுக்கு வீடு வழங்க வேண்டும். 100நாள் வேலை திட்டத்தை நகர்ப்புறங்களிலும் அமல் படுத்த வேண்டும்என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவினாசி தாலுகா அலுவலகம் முன்பாக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்த முற்பட்டனர். அப்போது காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். இருப்பினும் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று தாலுகா அலுவலகம் அருகில் பஸ் நிறுத்தம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக தாசில்தாரிடம் மனு அளிக்கப்பட்டது. இதில் மாதர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் இ.வளர்மதி, ஒன்றிய செயலாளர் ஆர்.கே. செல்வி, ஒன்றிய தலைவர் சித்ரா, ஒன்றிய நிர்வாகிகள் வி. தேவி, எஸ். சிவகாமி, திருமுருகன்பூண்டி நகர மன்ற உறுப்பினர் பார்வதி, புதுப்பாளையம் ஊராட்சி மன்ற உறுப்பினர் தேவிகா உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.
-