அனைத்து மருந்தாளுனர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம்

அனைத்து மருந்தாளுனர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
கரூர்
கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருந்தகத்தில் நேற்று தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம், பணிநிறைவு பாராட்டு விழா, உலக மருந்தாளுனர் தின விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பு செயலாளர் பிரேம்குமார் வரவேற்றார். இதில் மருந்துகளை மருந்தாளுனர்களே கையாள வேண்டும். அரசு துறையில் இருக்கக்கூடிய காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். 39 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணியமர்த்தப்பட்ட மருந்தாளுனர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story






