அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

நெல்லையில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மூடப்பட்ட கல்குவாரிகளை திறக்க கோரிக்கை விடுத்துள்ளனர்

திருநெல்வேலி

நெல்லையில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மூடப்பட்ட கல்குவாரிகளை திறக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆர்ப்பாட்டம்

நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற விபத்தில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து கல் குவாரிகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் மூடப்பட்ட கல்குவாரிகளை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நெல்லை வண்ணார்பேட்டையில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்டிட தொழிலாளர்கள் சங்க தலைவர் மகாலிங்கம் தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

பாதிப்பு

அப்போது அவர் கூறுகையில், நெல்லை மாவட்டத்தில் கட்டுமான தொழில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 5 லட்சம் தொழிலாளர்கள் இதை நம்பி உள்ளனர். தொழில் முடங்கி கிடப்பதால் முதல்-அமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்லவே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தினோம். நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகம் ஸ்தம்பிக்கும் அளவுக்கு போராட்டம் நடைபெறும், என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ரமேஷ், அழகியகூத்தன், அய்யப்பன், அலெக்சாண்டர், பிரதாப்சிங் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

இதையொட்டி நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் தலைமையில், துணை போலீஸ் கமிஷனர்கள் சீனிவாசன், அனிதா ஆகியோர் நேரடி மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


Next Story